பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அரசு பஸ்சில் மதரீதியாக அவமதிக்கப்பட்ட போது தைரியமாக எதிர்த்து நின்ற கிராம கோவில் பூஜாரியை ஹிந்து முன்னணி பாராட்டியது.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ்சில் மனைவி மற்றும் மகன்களுடன் பயணித்த பூஜாரி சுப்பிரமணியனை, கண்டக்டர் அந்தோணி அடிமை அவதூறாக பேசி அவமானப்படுத்தினார்.
மேலும், வள்ளியூர் ஊருக்குள் பஸ் செல்லாது எனவும் கூறி, மற்ற பயணிகளையும் தூண்டி விட்டார். இந்த அவமதிப்புக்கு எதிராக பூஜாரி சுப்பிரமணியன் துணிச்சலாக எதிர்த்து பஸ்சை வள்ளியூர் ஊருக்குள் செல்லச் செய்து, பின் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஹிந்து முன்னணி மாநில செயலர் கா.குற்றாலநாதன் வள்ளியூரில் உள்ள பூஜாரி சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டினார். 'அநியாயத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் முன்மாதிரியாகும்' எனவும் கூறினார்.
கோட்ட தலைவர் தங்க மனோகர், செயலர் பிரம்மநாயகம், மாவட்ட செயலர் சிதம்பரம், பொருளாளர் பரமசிவம், துணைத்தலைவர் ஜெயக்கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கணபதிராமன், நகர் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதரீதியாக கொண்டுசெல்லவேண்டாம் , ஒரு தனிமனிதனின் உரிமையை மீட்டெடுத்த நாயகனாய் பார்க்கிறேன், அந்தோணி போன்ற மதத்திமிர் பிடித்த ...கள் மனிதனாய் இருக்கவே அருகதை அற்றவர்கள், எங்கே உதயநிதி ? டெங்கு எய்ட்ஸ் போன்றவை எங்கே இருக்கிறது என்று இப்போதாவது உணர்வான அந்த மரமண்டை ?
சபாஷ் .... பாராட்டுக்கள். இப்படி பாராட்ட வேண்டிய நிலையில் இந்துக்கள் இருப்பது கவலை அளிக்கிறது. மதம் மாறிய கிரிப்டோக்கள் மிக தீவிரமாக செயல்படுகிறார்கள்.
பூசாரி சுப்பிரமணியனுக்கு போலீஸ் பந்தோபஸ்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்துக்களுக்கு பெரிய ஆபத்தாகிவிடும்
இதுபோல் எங்கே நடந்தாலும் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் இந்துக்கள் ஒற்றுமை புரியும். திராவிட கும்பல் ஓட்டுக்காக எதையும் செய்யும். மக்களே புரிந்து கொள்ளுங்கள்
அரசாங்கம் கடை பிளவு படுத்துகிறது பிரிப்பதும் அவர்கள் தான் ஒருவரை ஆதரிப்பதும் மற்றவரை இழிவாக பேசுவது ஆட்சியாளர் கைவந்த கலை அதனால் நடந்த விளைவுமேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'