டிப்பர் லாரி மீது மோதிய மொபட் கல்லுாரி மாணவி, மாணவன் பலி
பவானி, பவானி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுபர்ணிகா, 19; நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் தனியார் கல்லுாரி முதலாமாண்டு பி.காம்., மாணவி. அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ், 19; டி.என்.பாளையம் தனியார் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு கம்ப்யூட்டர் அறிவியல் மாணவர். சவுபர்ணிகா வீட்டருகே சதீஷ் உறவினர்கள் வசிக்கின்றனர். சதீஷ் அங்கு வந்து சென்றபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.
அந்தியூர் - பவானி சாலையில், செலம்பகவுண்டன்பாளையம் வழியாக, ஹோண்டா ஆக்டிவா மொபட்டில், இருவரும் நேற்று மாலை சென்றனர். முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது, எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த டிப்பர் லாரி மீது மொபட் மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவரும் பலியாகினர்.
பவானி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக டிப்பர் லாரி டிரைவரான, திருச்செங்கோடு, புள்ளாக்கவுண்டன்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 25, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி டாக்டர் உமர் நபி யார்; வெளியான புதிய தகவல்கள்
-
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் தக்க பதிலடி கொடுக்கணும்; பியூஷ் கோயல் வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
-
மும்பையில் தொழிலதிபர் டிஜிட்டல் கைது: ரூ.53 லட்சம் மோசடி
-
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை துவக்கம்