டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை துவக்கம்

3


புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று( நவ.,10) காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்ததும், டில்லி போலீசார், என்எஸ்ஜி, என்ஐஏ அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தங்களது விசாரணையை துவக்கினர்.

Advertisement