இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சென்னை: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, அடையாமடை, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஆகிய இடங்களில், தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 16 வரை லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
-
பீஹாரில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,302 வேட்பாளர்கள் போட்டி
-
இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்
-
இ.கம்யூ., தனித்தே 20 எம்.பி.,க்களை பெறும்
-
கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்
-
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு