வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் சிறப்புத் தீவிர திருத்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் பகுதியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான படிவங்கள் விநியோகிக்கும் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தில் புகைப்படம் ஒட்டி, முழுமையாக பூர்த்தி செய்துள்ளார்களா. வாக்காளர் அல்லது வாக்காளரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் முறையாக ஒப்படைத்துள்ளனரா. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுகிறார்களா என பார்வையிட் டார். மேலும், தீவிரத் திருத்த பணிகளை முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
-
பீஹாரில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது; 1,302 வேட்பாளர்கள் போட்டி
-
இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்
-
இ.கம்யூ., தனித்தே 20 எம்.பி.,க்களை பெறும்
-
கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்
-
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு