விருதுநகரில் கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் பேச்சிமுத்து,50, சங்கரபாண்டியன் ,65, என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.
பல கோணங்களில் ஆராய்வதாக கூறினாலும் முதல் பார்வையை கோணலாக பார்க்காமலிருந்தால் சரிதான்.
நாட்டில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் கொலைக்கு மரண தண்டனை என சட்டம் இயற்ற வேண்டும்
கொலை மட்டுமல்ல, திருட்டு, லஞ்சம், கற்பழிப்பு, சாலை விதி மீறல்கள், கற்பழிப்பு இவற்றிற்கெல்லாம் விசாரணை, கோர்ட் வழக்கு இவையெல்லாம் தேவையில்லாமல், குற்றவாளிகளை அந்தந்த இடங்களிலேயே நிர்வாணப்படுத்தி வீதியிலேயே தோல் பிய்யுமளவுக்கு சவுக்கடி கொடுத்து, சிறை, அபராதம் விதிக்க வழிமுறை செய்யுமாறு சட்டங்கள் திருத்தப்படவேண்டும்.
ஊழல் கொலை கொள்ளை கற்பழிப்பு தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நம் முதல்வர் திமுகவை தொட்டுப் பார்க்க முடியாது திமுகவின் வரலாறு தெரியாதவர்கள் என்று கீரல் விழுந்த ரெக்கார்டர் போல சொல்லிக் கொண்டிருக்கிறார்.இதுதான் திராவிட மாடல்.
அப்பா ஆட்சியில் அப்பபப்பா தினமும் கொலை கொள்ளை பலாத்காரம் தான். ஊருக்கு ஊர் மேடை போட்டு தனக்குத்தானே புகழ்ந்து கொள்வதில் ஒன்றும் குறைவில்லை.
இந்துக்களின் கோவிலில் இருந்து எவ்வளவு பணம் சுருட்ட முடியும்
நல்லா முட்டு கொடுக்கிறார்
இந்த விடியா அரசு என்று ஓழியும்? எப்டி இருந்த தமிழ்நாடு இன்று இப்டி.. திருட்டு டிராவிடன்ஸ் இருக்கும் வரை கொலை கொள்ளை கும்பலுக்கு கொண்டாட்டம் .. மக்கள் ? மிஸ் யு புரட்சி தலைவி JJ மேடம்
ஓட்டுக்கு நாலோ அஞ்சோ ஏன் ரெண்டோ கூட கெடக்கி போடுறோம். நாங்க மாற மாட்டோமப்பா மாற மாட்டோம்.
தமிழ் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே டாஸ்மாக் நாடு, கஞ்சா நாடு, ஸார் நாடு, ஊழல் நாடு, கொள்ளை நாடு , கொலை நாடு.. அவ்வளவு சிறப்பான அப்பாவின் ஆட்சி அப்பப்பா..
எந்த ஆட்சி வந்தா இதெல்லாம் நடக்காதுன்னு சொல்ல முடியும்? மனிதன் மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறான் என்பதை தவிர ஒன்னும் சொல்ல முடியாது.....
மனிதன் மிருகமாக மாறிவிடக்கூடாது என்பதற்குத்தான் மதங்கள் இருக்கின்றன. ஆனால் மனிதனை மிருகமாக மாற்றுவதற்கே இந்த விடியா அரசு இயங்குகிறது. கள்ள சாராயத்துக்கு ஊக்குவிப்புத்தொகை பத்து லட்சம், டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க மாவட்ட ஆட்சியரிடமிருந்து பாராட்டுப்பத்திரம் என்று பல வகையிலும்.
நேற்று திருச்சி. இன்று விருதுநகர். நாளை எந்த ஊரோ? இப்படி கொலைகள் திமுக ஆட்சியில் தொடர்ந்து நடப்பதால்தான், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் டெல்லி, மும்பை நகரங்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறார்கள். சென்னைக்கு வருவதில்லை. திமுக ஆட்சியில் இருக்கும்வரை வரமாட்டார்கள்.மேலும்
-
டில்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்
-
பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு
-
அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து; வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
-
ஹிந்தி நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்: மகள் ஈஷா தியோல் தகவல்
-
காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட கார்: டில்லி குண்டு வெடிப்பில் 'திடுக்'