காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட கார்: டில்லி குண்டு வெடிப்பில் 'திடுக்'
புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது. தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது.தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிறைந்த பகுதி புல்வாமா என்பதால் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது அம்பலம் ஆகி உள்ளது. சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமா பகுதிக்கு கை மாறி இருக்கிறது.
போலீசார் இப்போது புல்வாமாவை சேர்ந்த உமரை தேடி வருகின்றனர். இறந்தவர்களில் அவரும் இருக்கிறாரா என்று விசாரித்து வருகின்றனர். ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே நாளில் டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதனால் வெடிபொருள் பதுக்கிய கும்பலுக்கும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலு அடைந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (26)
Barakat Ali - Medan,இந்தியா
11 நவ,2025 - 18:45 Report Abuse
புல்வாமா இந்திய இறையாண்மையின் கட்டுப்பாட்டில் இல்லீங்களா ???? 0
0
Reply
INDIAN - chennai,இந்தியா
11 நவ,2025 - 14:58 Report Abuse
படித்தது இந்திய வரி பணத்தில், வேலை செய்து பணம் சம்பாதிப்பது , இந்திய வரி பணத்தில், கடைசியில் இந்தியாவிற்கு துரோகம் செய்வது 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
11 நவ,2025 - 12:22 Report Abuse
சில கட்சிகள் அரசியல் லாபத்திற்காக தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறார்கள். இது இந்தியாவின் வருங்கால சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். தேர்தல் கமிஷனும், உச்சநீதிமன்றமும் இதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
11 நவ,2025 - 12:18 Report Abuse
அரசியலுக்காக உண்மை யாரும் பேசுவதில்லை 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 நவ,2025 - 12:09 Report Abuse
மூளை சலவை செய்யப்பட்ட மர்ம அமைதி வழி டாக்டர்கள் 4 பேருக்கும் மேல். அவர்களில் ஒருத்தி பெண். பாகிஸ்தானின் நிதி உதவியுடன் காஷ்மீரில் இருந்து சிறிது சிறிதாக அமோனியம் நைட்ரைட் என்ற வெடி குண்டு பொருளை கடத்தி ஹரியானாவில் ஒரு வீட்டில் சேர்த்து வைக்கிறார்கள். 3000 கிலோ மேல் வெடிகுண்டு பொருட்கள். அனைத்து காட்டான்களுக்கும் அவனது சமூக மெடிக்கல் காலேஜில் வேலை.
இதிலே ஒரு தீவிரவாதி காஷ்மீரில் அரசுக்கு எதிராக நோட்டீஸ் ஓட்டும் போது பிடிபட, இந்த முழு சதியும் வெளிவருகிறது. ஹரியானாவில் இரண்டு டாக்டர்கள் போலீசில் பிடிபட, அதில் தப்பிய ஒருவன் போலி பெயரில் வாங்கிய காரில் வெடிகுண்டை நிரப்பி டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிக்க செய்கிறான். இறந்த தீவிரவாதியின் ஒரு கை மட்டும் கிடைத்து உள்ளது. அது காஷ்மீரில் உள்ள அவனை பெற்ற தாயின் DNA வோடு பொருந்தி உள்ளது.
என்ன படித்து இருந்தாலும் மர்ம நபர்களை நம்ப முடியாது என்பது வெளிச்சம். அது மட்டுமே நமக்கு வரலாறு சொல்லும் உண்மை. 0
0
Field Marshal - Redmond,இந்தியா
11 நவ,2025 - 12:47Report Abuse
அமோனியம் நைட்ரைட் பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் மூல பொருள் மேலும் கருங்கல் ஜல்லி தயாரிக்க மற்றும் சுரங்கம் தோண்ட வெடி பொருளாக பயன் படும் .. 0
0
Reply
Kulandai kannan - ,
11 நவ,2025 - 12:08 Report Abuse
அனைவரும் பயங்கரவாதி இல்லை. ஆனால்............ 0
0
Reply
Indianதமிழன் - chennai,இந்தியா
11 நவ,2025 - 11:56 Report Abuse
3 டன் வெடிபொருள் முதல் நாள் பயங்கரவாதிகளிடம் இருந்து பரிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 0
0
Reply
mohan - chennai,இந்தியா
11 நவ,2025 - 11:54 Report Abuse
விலங்குகள் வாழ்க்கை, பரவா இல்லை போல தெரிகிறது. 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
11 நவ,2025 - 11:42 Report Abuse
உள்ளூர் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை நிச்சயம் தர வேண்டும். 0
0
Reply
Sangi Mangi - ,இந்தியா
11 நவ,2025 - 10:54 Report Abuse
பிகார் தேர்தல். பிஜேபி இன் சித்து விளையாட்டுகள் ஆரம்பமாகி விட்டது .... பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் .... 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
11 நவ,2025 - 11:38Report Abuse
வாழ்வது பாரத மண்ணில் குடிப்பது இங்குள்ள நீர். ஆனால் பாசம் திருட்டு காந்திகளைப் போல் வேறொரு தேசத்துக்கு போய் தொலைங்க இந்த மண்ணைவிட்டு 0
0
N Sasikumar Yadhav - ,
11 நவ,2025 - 12:51Report Abuse
உன்னய மாதிரியான கேவலமான பயங்கரவாத ஆதரவாளன்களை கைதுசெய்து விசாரித்தால் உண்மையான தகவல் கிடைக்கும் . திருட்டு திமுக களவானிங்க மாதிரியே 24 மணிநேரமும் குண்டு வைக்கிற பாகிஸ்தானிய பயங்கரவாத கும்பலுங்களுக்கு ஆதரவாகவே இருக்கிறீர்களே அது எப்படி வசிக்கிற நாட்டிற்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருங்க 0
0
Raman - Chennai,இந்தியா
11 நவ,2025 - 13:08Report Abuse
Anti-national elements must be interrogated 0
0
Raman - Chennai,இந்தியா
11 நவ,2025 - 13:11Report Abuse
Extra vigilance and surveillance must be explored to monitor locals, who support these criminals and tragic events.. 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆறு பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி
-
நாட்டை உலுக்கிய நிதாரி கொலை; கடைசி வழக்கில் இருந்தும் சுரேந்தர் கோலியை விடுவித்தது சுப்ரீம்கோர்ட்
-
பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்
-
டில்லி குண்டுவெடிப்பில் அம்பலமான 'ஒயிட் காலர்' பயங்கரவாதம்: உலகம் முழுவதும் பரவிய நெட்வொர்க்
-
ககன்யான் திட்டத்தில் பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு
-
கோர்ட் வெளியே குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில்12 பேர் பலி
Advertisement
Advertisement