'கொடை' நாயுடுபுரத்தில் நீடிக்கும் நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரத்தில் நீடிக்கும் நெரிசலுக்கு தீர்வு காண துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது .
நாயுடுபுரம் வில்பட்டி, பாக்கியபுரம், பச்சைமரத்து ஓடை, ரைபிள் ரேஞ்ச் ரோடு, விநாயகர் கோயில், சின்னபள்ளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சந்திப்பு ரோடாக உள்ளது. மைய பகுதியான இங்கு தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளன. பாக்கியபுரம் செல்லும் குறுகிய ரோட்டில் ஆக்கிரமிப்பு, ரோட்டோர பார்க்கிங் என எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல் இடியாப்ப சிக்கல் தொடர்கிறது.
ஏராளமானோர் வந்து செல்லும் பகுதியில் நாள்தோறும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இங்கு நீடிக்கும் நெரிசல் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. நாயுடுபுரத்தில் நெரிசலின்றி போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி