ஆட்டோ விபத்தில் 11 சிறார்கள் காயம்

பழநி: பழநி கோதைமங்கலம் ரோடு நல்லம்மாள் நகர் பகுதியில் பள்ளி சிறார்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 11 சிறார்கள் காயமடைந்தனர்.

பழநி வி.கே. மில்க்சை சேர்ந்த குணசேகரன் 57, தனது ஆட்டோவில் நேற்று மாலை 5 :00 மணிக்கு தனியார் பள்ளிகளில் இருந்து 11 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஏற்றி வந்தார். நல்லம்மாள் நகர் பகுதியில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். பழநி தாசில்தார் பிரசன்னா காயமடைந்த மாணவிகளை மருத்துவமனையில் பார்வையிட்டார்.

Advertisement