கிருஷ்ணா கால்வாயில் சி.ஆர்.பி.எப்., வீரர் உடல் மீட்பு
ஆவடி: ஊருக்கு விடுப்பில் சென்ற சி.ஆர்.பி.எப்., வீரர், கிருஷ்ணா கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அருள் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன், 36; சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்.
இவர், ஆவடி சி.ஆர்.பி.எப்., காவலர் குடியிருப்பில் தங்கி, ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுஜாதா, 26. தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார். சுஜாதா தற்போது, நான்கு மாத கர்ப்பிணி. கடந்த 8ம் தேதி, ஊருக்கு செல்வதாக கூறி சபரிநாதன் விடுப்பில் சென்றார். மறுநாள் இரவு வரை சபரிநாதன் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, அவரது அலுவலகத்தில் விசாரித்து, கடந்த 9ம் தேதி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஆவடி அடுத்த மோரை, அண்ணா நகர் அருகே கிருஷ்ணா கால்வாயில், ஆண் சடலம் மிதப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
ஆவடி தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி உடலை மீட்டனர். போலீசார், சபரிநாதன் மனைவியை வரவழைத்து பார்த்தபோது, அது சபரிநாதன் உடல் என உறுதி செய்யப்பட்டது.
சபரிநாதன், மது போதையில் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி