கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் நீக்கம்

கோவை: கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்சன் மீது எழுந்த புகார்களை தொடர்ந்து, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வின்போது, ஆசிரியர்களிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்வது, மதிய உணவு ஏற்பாடு செய்ய சொல்வது, அதற்காக பணம் கேட்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தாம்சன் மீது, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மூலம் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து நமது நாளிதழின், 'டீக்கடை பெஞ்ச்' பகுதியில் நேற்று (நவ.12) தகவல் வெளியானது. இதையடுத்து, கோவை மாநகராட்சி கமிஷனர், நிர்வாக நலன் கருதி தாம்சனை மாநகராட்சி கல்வி அலுவலர் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க, ஆணை பிறப்பித் துள்ளார்.

Advertisement