தமிழக முதல்வர் வரும் 26ல் ஈரோடு வருகை
ஈரோடு, ஈரோடு மாவட்டத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் வரும், 26ல் வருகை தருகிறார். அன்று நடைபெறும் திருமண நிகழ்ச்சி, சிலை திறப்பு, நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி
களில் கலந்து கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின் வரும், 26 மதியம் சென்னையில் இருந்து, கோவைக்கு விமானம் மூலம் வருகிறார். பின் அங்கிருந்து கார் மூலம், ஈரோடு மாவட்டம் சித்தோடு வருகிறார். இங்குள்ள கொங்கு மண்டபத்தில், கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து சித்தோடு ஆவின் நிறுவன வளாகத்தில், எஸ்.கே.பரமசிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இரவு, ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் (27) காலை அரச்சலுாரை அடுத்த நல்லமங்கா
புரத்தில், பொல்லான் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஓடாநிலை சென்று, தீரன் சின்னமலை சிலை அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதையடுத்து, சோலார் பஸ் ஸ்டாண்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
களை வழங்குகிறார். பின்னர் கோவைக்கு கார் மூலம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள், முதல்வர் வருகை குறித்த ஆயத்த பணிகளை துவங்கி உள்ளனர்.
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி