மது அருந்தி ஓட்டிய டிரைவர் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்


ஏற்காடு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் ஏற்காட்டை சுற்றிப்பார்க்க சுற்றுலா வேனில் புறப்பட்டனர். ராசிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன், 29, ஓட்டினார். தொடர்ந்து ஏற்காடு வந்தவர்கள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

நேற்று சேர்வராயன் கோவில் பகுதிக்கு சென்றனர். அங்கு டிரைவர் உள்பட அனைவரும் மது அருந்தினர். பின் அங்கிருந்து ஏற்காடு நோக்கி புறப்பட்டனர். சிறிது துாரத்தில் மிக இறக்கமான சாலையில் வந்தபோது, ஸ்ரீதரன் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் வலது புறமாக கவிழ்ந்தது.


இதில் வேனில் வந்த, 8 பேர் காயம் அடைந்தனர். மக்கள் தகவல்படி, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர்கள், ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதில், 3 பேர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement