'குரூப் 2' இலவச பயிற்சி வரும் 19ல் தொடக்கம்
சேலம், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுக்கு, ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, வரும், 19ல், சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்க உள்ளது. அதில் மாதிரி போட்டி தேர்வு நடத்தி, உடனுக்குடன் மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
கடந்த, 4 ஆண்டுகளில் பல்வேறு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு, 52 இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 3,191 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். அவர்களில், 462 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
அதனால், 2026ம் ஆண்டு குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம். விபரங்களுக்கு, 0427 - 2401750 என்ற எண்ணில் அழைக்கலாம் என, கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement