தோண்டிய குழியில் கிடைத்த 1 அடி உயர ஐம்பொன் சிலை
தஞ்சாவூர்: கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டிய போது, 6 அடி ஆழத்தில் ஐம்பொன் சிலை ஒன்று கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாந்தக்குளத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர், நேற்று தன் வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கான ஆட்கள் மூலம், குழி தோண்டிக் கொண்டிருந்த போது, 6 அடி ஆழத்தில், சிலை இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து, தொழிலாளர்கள் அந்த சிலையை எடுத்த போது, அது, 1 அடி உயரமுள்ள, தோளில் கிளி அமர்ந்திருக்கும் நிலையில், 6 கிலோ எடையிலான மீனாட்சியம்மன் சிலை என தெரிந்தது.
இது குறித்து, சரண்யா, வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். பேராவூரணி தாசில்தார் சுப்பிரமணியன், சிலையை அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். சிலையை தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பார்வையிட்டார். மீட்கப்பட்ட சிலை, 100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement