பண்ருட்டியில் இம்மாத இறுதியில் புது மின் பிரிவு அலுவலகம் திறப்பு
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் இருந்து, நிர்வாக காரணங்களுக்காக, பண்ருட்டியில் இம்மாத இறுதியில், புது மின் பிரிவு அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் மின் வாரிய கோட்டம், வல்லக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, நிர்வாக காரணங்கள் மற்றும் மின் நுகர்வோர் வசதிக்காகவும், பண்ருட்டி மின் வாரிய உதவி பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி புதிய பிரிவு அலுவலகத்திற்கு குறியீட்டு எண்: 596 ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தின் கீழ், பண்ருட்டி, வெண்பாக்கம், குன்னவாக்கம், ஏலக்காமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
இதற்கு, வல்லக்கோட்டை உதவி பொறியாளர் அலுவலகத்திலேயே, தற்காலிக அலுவலகம் செயல்படும்.
மேற்கண்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் அந்த அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸாப் மூலமாகவோ தொடர்பு கொண்டு, தங்களின் புதிய மின் இணைப்பு எண் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், இம்மாத இறுதிக்குள், பண்ருட்டி பகுதியில், புதிய உதவி பொறியாளர் அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காலிக மொபைல் போன் எண்கள்: 80983 07394, 94451 01648.
மேலும்
-
டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்
-
இன்று தொடங்கும் துபாய் விமான கண்காட்சி; இந்திய விமானப்படை பங்கேற்பு
-
பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை
-
சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு
-
வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை; இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஷேக் ஹசீனா உருக்கம்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு; ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை