வெனிசுலாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு; அதிபர் டிரம்ப் தகவல்
வாஷிங்டன்: வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், அதிபர் டிரம்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
கரீபியன் கடலில் பல போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதுமட்டுமன்றி 15 ஆயிரம் படைகளையும் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் வரும்போது அமெரிக்கா மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மதுரோவுடன் விவாதங்கள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அதேநேரத்தில், ''அமெரிக்க அரசு தனக்கு எதிராக ஒரு போரை புனைந்து வருகிறது. வெனிசுலா மக்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பிலிருந்தும் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கத் தயாராக உள்ளனர்'' என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் அவர் வெனிசுலா பேச விரும்புகிறது, என தெரிவித்தார். செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து, கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா நடத்திய 21 தாக்குதல்களில், 83 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பொழுது விடிஞ்சா ஒண்ணு யார் கூடயாச்சும் வம்பு இழுக்கணும் ! இல்லன்னா யார் கூடயாச்சும் பேச்சு வார்த்தை நடத்தனும்! இதெல்லாம் ஒரு பிழைப்பு?
போதை மருந்து ஒழிப்பு என்ற எண்ணம் எல்லாம் அமெரிக்காவுக்கு கிடையாது வெனிசுலாவின் எண்ணெய் வளம் ஒன்றே குறி
ட்ரம்ப் க்கு போரை நிறுத்தவும் தெரியும். அதைவிட முக்கியமா போரை துவங்கவும் தெரியும்.மேலும்
-
டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்
-
இன்று தொடங்கும் துபாய் விமான கண்காட்சி; இந்திய விமானப்படை பங்கேற்பு
-
பிளின்த் பீம், கிரேடு பீம், கிரவுண்ட் பீம்; வேறுபாடு என்ன? கட்டுமான செலவை குறைக்க பொறியாளர்கள் ஆலோசனை
-
சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு
-
வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை; இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஷேக் ஹசீனா உருக்கம்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு; ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை