தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
ராமநாதபுரம்: தேவையுள்ள இடங்களில் கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த மாநில சிறுபான்மையினர் ஆணையம்ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றஅவர் கூறியதாவது:
மாவட்டந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் சிறுபான்மையின மக்களை சந்தித்து ஓராண்டில் 1477 மனுக்கள் பெறப்பட்டு 1156க்கு தீர்வு காணப்பட்டது.
38 வது மாவட்டமாக சென்னையில் நவ.,27ல் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள முக்கிய பிரச்னையான கல்லறை தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கி இடம் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கல்லறை சுற்றுச் சுவர் அமைத்தல், அங்கு புதைக்க இடையூறாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி னர்.
மக்களின் கோரிக்கைகள் குறிப்பெடுத்துள்ளோம். அவற்றின் மீது 15 நாள் முதல் ஒரு மாதத்திற்கு தீர்வு காணப்படும்.
தேவையுள்ள இடங்களில் கல்லறைத்தோட்டம், கபர்ஸ்தான் அமைக்கப்படும்.
ஆணையத்தின் பரிந்துரை காரணமாக சிறுபான்மையினர் அதிகமாக வாழும் கிராமப்புற பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக வைத்துள்ள சர்ச், மசூதி களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்
-
குடிநீர் கசிவை தடுக்க திட்டம் 'புளூ போர்ஸ்' இன்று துவக்கம்
-
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
-
பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்
-
மழையால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிப்பு