சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
வாஷிங்டன்: சவுதி அரேபியாவுக்கு, 'எப் - 35' ரக போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். சீனாவுடன் சவுதி அரேபியா கொண்டுள்ள உறவால் இந்த விமான விற்பனைக்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும், டிரம்ப் இந்த ஒப்புதல் அளித்துள்ளார்.
நட்பு நாடு மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து 48 'எப் - 35' ரக போர் விமானங்களை வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, சவுதி அரேபியாவுக்கு தன் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய 'எப் - 35 ரக' போர் விமானங்களை விற்பதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சவுதி சிறந்த நட்பு நாடு, இளவரசர் சல்மானுக்கு, அவர் நீண்ட காலத்திற்கு போற்றும் வகையில் ஒரு பரிசை வழங்குகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு 'எப் - 35' ரக போர் விமானங்கள் அமெரிக்கா வழங்குவதால் இரு நாடுகளிடையே வலுவான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்றாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற் றும் உளவுத்துறை அமைப்புகள் தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியாவுடன், சீனா தற்போது வளர்த்து வரும் ராணுவ மற்றும் பொருளாதார உறவுகளே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப் படுகிறது.
'எப் - 35' ரக போர் விமானங்களை சவுதிக்கு வழங்கும் பட்சத்தில், அதில் உள்ள தொழில்நுட்ப ரகசியங்களை, சவுதி அரேபியா வாயிலாக சீனா பெறுவதற்கான அபாயம் உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.
ஏற்கனவே, தன் முதல் பதவி காலத்தின்போது, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்த போர் விமானங்கள் வழங்குவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஐந்து ஆண்டுகள் கடந்தும், இதுவரை ஒரு விமானம் கூட தரப் படவில்லை.
வலியுறுத்தல் சீனாவுடன் நெருக்கமான உறவில் இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இதேபோன்ற 'எப் - 35' ரக போர் விமானங்கள் விற்பதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு போர் விமானங்கள் வழங்குவதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், பார்லிமென்ட் ஒப்புதல் உட்பட பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதனால், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இஸ்ரேலுடன் துாதரக உறவுகளை உருவாக்கும்படி சவுதி அரேபியாவை வலியுறுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதனாலே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்காசியாவில் உள்ள நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், 'ஆப்ரஹாம் ஒப்பந்தம்' அமெரிக்காவின் முயற்சியில், 2020ல் உருவானது.
இதில், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ, சூடான் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
பிராந்திய ஒத்துழைப்பு, துாதரக ஒத்துழைப்புக்கானது இந்த ஒப்பந்தம். இதில், சவுதி அரேபியாவையும் இணைக்க டிரம்ப் விரும்புகிறார்.
@block_B@ அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் என்ற நிறுவனம், 'எப் - 35' போர் விமானத்தை தயாரிக்கிறது. தற்போதைய நிலையில், 19 நாடுகளிடம் இருந்து, 1,172 விமானங்களுக்கான ஆர்டர் உள்ளது. இஸ்ரேல் மட்டும், 75 விமானங்களுக்காக காத்திருக்கிறது.block_B
மேலும்
-
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்
-
குடிநீர் கசிவை தடுக்க திட்டம் 'புளூ போர்ஸ்' இன்று துவக்கம்
-
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
-
பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்
-
மழையால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிப்பு