ஈரான் இந்தியர்களுக்கான இலவச விசா ரத்து

டெஹ்ரான்:: சுற்றுலா பயணியரை ஈர்க்கவும்: குறிப்பாக இந்திய சுற்றுலா பயணியர், 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகபட்சமாக 15 நாட்கள் வரை விசா இல்லாமல் ஈரானுக்கு செல்ல முடியும்.

இந்த இலவச விசா சலுகையை அந்நாட்டில் உள்ள சில மோசடி கும்பல்கள் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இக்கும்பல், இந்தியாவில் வேலையற்ற இளைஞர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் பெற்றுத் தருவ தாக பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ள து கண்டறியப்பட்டது.

வேலை தேடி ஈரானுக்கு வரும் அப்பாவி இந்தியர்களை இக்கும்பல் கடத்தி, கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களிடம் அவர்களை விடுவிக்க கோடிக்கணக்கான ரூபாய் பிணைத் தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர். இதை அடுத்து பாதுகாப்பு கருதி, வரும், 22ம் முதல் இந்த விசா சலுகை ரத்து செய்யப்படுகிறது.

Advertisement