போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, இந்தியன் செஞ்சிலுவை சங்கம், ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் அழகன் குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை யாசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஜே.ஆர்.சி., கவுன்சிலர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் பயிற்சியை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர், மனநல மருத்துவர் தேன்மொழி மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் தவிர்ப்பது எப்படி.மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாவட்ட ஜே.ஆர்.சி., கன்வீனர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் இருதயராஜ் ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி துணை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மண்டபம் ஒன்றியம் ஜே.ஆர்.சி., கன்வீனர் பாலமுருகன் நன்றி கூறினார்.
மேலும்
-
திருக்கோவிலுார், 20 ஊராட்சிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைப்பது... எப்பொது? அத்தியாவசிய தேவைக்காக அலையும் மக்கள் பிரச்னைக்கு தீர்வு தேவை
-
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்
-
குடிநீர் கசிவை தடுக்க திட்டம் 'புளூ போர்ஸ்' இன்று துவக்கம்
-
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
-
பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்