வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ''அமெரிக்காவுக்கு வரிகள் மற்றும் முதலீடுகள் மூலம் கோடிக்கணக்கான டாலர்கள் வருமானமாக கிடைக்கின்றன,'' என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை வரிகளாகவும் முதலீடுகளாகவும் நாங்கள் பெறுகிறோம். 8 போர்களில் 5 போர்களை நேரடியாக நிறுத்திவிட்டேன்.
ஏனெனில் அவர்கள் சண்டையை நிறுத்தாவிட்டால் அல்லது இன்னும் சிறப்பாக, அவை தொடங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் தான் இதற்கு காரணம். பணவீக்கம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இல்லை.
ஜோ பைடனின் கீழ் அமெரிக்க வரலாறு மிக மோசமானது. பங்குச் சந்தை 9 மாதங்களில் 48வது முறையாக உயர்ந்துள்ளது; இதுவரை இல்லாத உச்சத்தில் இருக்கிறது. நாட்டை அழிக்க அனுமதிக்கும் நீதிமன்ற பிரச்னை இனி இல்லை.
இது அமெரிக்கா இதுவரை இருந்ததிலேயே மிகவும் பணக்கார, வலிமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறும். நவம்பர் 5ம் தேதி (தேர்தல் மூலம் வெற்றி பெற்றதை குறிப்பிடுகிறார்) மற்றும் வரிகள்தான் அதற்கான காரணங்கள் ஆகும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
அடுத்தவன் சொத்தை வரின்னு சொல்லி ஆட்டய போட்டு இப்படி உதார் ன உடும் ஜோக்கர் இவன்
பிட்ச்சை எடுத்து, அடுத்தவனை கெடுத்து பணம் சேர்த்தார் என்பதே உண்மை இதில் என்ன பெருமை அடைய வேண்டி இருக்கு. எங்க தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், இதை எத்தனையோ வருடத்துக்கு முன்னரே செய்து வருகின்றனர்
நம்ம ஊரு வைகோவும், இவரும் ஒன்னு. பேச ஆரம்பிச்சா, சம்பந்தா சம்பந்தம் இல்லாம, விடாம பேசிக்கிட்டே இருப்பாங்க. ரெண்டு பேரும், கிருஷ்ணா ராமா கோவிந்தானு ஒரு மூலைல இருந்தா நலம். சரியான குட்டைக்குழப்பிகள்.
பாவங்க நம்ம உலக்கை நாயகன் கோவிசுக்க போறாருமேலும்
-
வங்கக்கடலில் நிலவுகிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
பள்ளி அருகே பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் மீட்பு: உத்தராகண்டில் அதிர்ச்சி
-
சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்க உதவியவர் ஸ்ரீ சத்ய சாய்பாபா; துணை ஜனாதிபதி சிபிஆர் புகழாரம்
-
நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி என்கிறார் விஜய்
-
டிசம்பர் 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது!
-
ரம்யாவின் ராகங்கள்...