டிசம்பர் 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது!
சென்னை: டிச.,10ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடக்கிறது என அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், டிசம்பர் 10ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சட்டசபை தேர்தல் வியூகம், கூட்டணி தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
பின்னணி
கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், சமீபத்தில் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதற்காக அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா உடன் இணைந்து பேட்டி அளித்து, நிகழ்ச்சிகளிலும் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினார்.
இத்தகைய சூழ்நிலையில் தான், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார் இபிஎஸ்., வரவிருக்கும் சட்டசபை தேர்தல், கூட்டணி தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து (5)
vel - ,
23 நவ,2025 - 14:42 Report Abuse
EPS மிகச் சிறந்த தலைமையாளர், மேலும் மக்கள் தலைவர், கட்சியின் மிகச்சிறந்த விசுவாசி. முதல்வர் பொறுப்புக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்தார் என்று நாம் அறிந்தாலும் வந்த பின் முதல்வர் பொறுப்புக்கு அழகு சேர்த்து மேலும் இக்கட்டான சூழ்நிலையில் அக்கட்சியை கொள்ளை கும்பலிடம் இருந்து காப்பாற்றி கட்சிக்கு அழகு சேர்த்த எம் ஜி ஆர் விசிவாசி நம் EPS. 0
0
Reply
Thangaraj - ,இந்தியா
23 நவ,2025 - 14:34 Report Abuse
நல்லது 0
0
Reply
Thangaraj - ,இந்தியா
23 நவ,2025 - 14:33 Report Abuse
அருமை அட்மட் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
23 நவ,2025 - 12:39 Report Abuse
வேஸ்ட் 0
0
Reply
Govi - ,
23 நவ,2025 - 11:55 Report Abuse
E BS தான்
இரு இலதான்
நான் M.G.R. விசு வாசி
என்றும் எண் சிம்பல்
இரு இலை உயர் உள்ள வரை 0
0
Reply
மேலும்
-
வங்கக்கடலில் நிலவுகிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
பள்ளி அருகே பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் மீட்பு: உத்தராகண்டில் அதிர்ச்சி
-
சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்க உதவியவர் ஸ்ரீ சத்ய சாய்பாபா; துணை ஜனாதிபதி சிபிஆர் புகழாரம்
-
நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி என்கிறார் விஜய்
-
ரம்யாவின் ராகங்கள்...
-
வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement