ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை; உக்ரைனை கடுமையாக சாடிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யாவுடனான மோதலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முன்மொழிவு பற்றி விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனின் தலைமை அமெரிக்க ஆதரவைப் பாராட்டத் தவறிவிட்டதாக கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து, டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு வன்முறை மற்றும் பயங்கரமானது. சரியான அமெரிக்க மற்றும் உக்ரைன் தலைமை இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது. நான் இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஜோ பைடன் நிர்வாகத்தின் போது இந்த போர் தொடங்கியது. பின்னர் மேலும் மோசமாகிவிட்டது.
ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு போரை எனது பதவிக்காலத்தில் நான் பெற்றேன். இந்த போர் அனைவருக்கும், குறிப்பாக கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தோல்வியாகும். உக்ரைன் தலைமை நமது முயற்சிகளுக்கு எந்த ஆதரவும் தரவில்லை. பாராட்டவும் இல்லை.
மேலும் ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. உக்ரைனுக்காக நேட்டோவிற்கு கணிசமான அளவு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது, அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தார். மனிதப் பேரழிவில் இழந்த அனைத்து உயிர்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும்
-
இந்திய பெண்கள் 'உலக சாம்பியன்': பார்வையற்றோர் 'டி-20' கிரிக்கெட்டில்
-
முத்துசாமி சதம்...இந்தியா பரிதாபம்: தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்
-
புதிய கேப்டன் ராகுல்: இந்திய அணி அறிவிப்பு
-
உலக விளையாட்டு செய்திகள்
-
லக்சயா சென் 'சாம்பியன்': ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்
-
இந்தியாவிடம் வீழ்ந்தது தென் கொரியா: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில்