வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

குன்னுார்: வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது.

குன்னுார் அருகே வெலிங்டன் ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது.

தினமும் காலை, 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, அத்தாழ பூஜை நடந்து வருகிறது. சனி தோறும் நீரான்ஜன பூஜை நடக்கிறது.

14ல், காலை, 10:00 மணி முதல் 12:30 மணி வரை பாலபிஷேகம், பகல், 12:40 மணிக்கு மகா தீபாராதனை, 1:00 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. 27ல் காலை 6:00 மணி, மாலை 5:00 மணிக்கு மண்டல பூஜை, ஜன., 14ல் மகரஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது.

ஏற்பாடுகளை ஐயப்பன் கோவில் அமைப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement