சூர்யா, ரித்விக் அபாரம்: தேசிய பாட்மின்டனில் சாம்பியன்
விஜயவாடா: தேசிய பாட்மின்டன் ஒற்றையரில் சூர்யா கரிஷ்மா, ரித்விக் சஞ்ஜீவி சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஆந்திராவின் விஜயவாடாவில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 87வது சீசன் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சூர்யா கரிஷ்மா தமிரி, தான்வி பத்ரி மோதினர். அபாரமாக ஆடிய விஜயவாடாவை சேர்ந்த சூர்யா கரிஷ்மா 17-21, 21-12, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரித்விக் சஞ்ஜீவி, பாரத் ராகவ் மோதினர். ஒடிசா மாஸ்டர்ஸ் (2024) தொடரில் கோப்பை வென்ற ரித்விக் சஞ்ஜீவி 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஆண்கள் இரட்டையர் பைனலில் ஹரிஹரன், ரூபன் குமார் ஜோடி 24-22, 21-17 என மிதிலேஷ் கிருஷ்ணன், பிரேஜன் ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் பைனலில் ஷிகா கவுதம், அஷ்வினி பாட் ஜோடி 21-14, 21-18 என பிரியா தேவி, ஷ்ருதி மிஷ்ரா ஜோடியை வென்றது.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் சாத்விக் ரெட்டி, ராதிகா சர்மா ஜோடி 21-9, 21-15 என அஷித் சூர்யா, அம்ருதா ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்