இந்தியாவுக்கு எதிரான 50 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்; அமெரிக்க பார்லியில் தீர்மானம்
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம், அமெரிக்க பார்லியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுடன் அதிக நெருக்கத்தை இந்தியா காட்டி வருகிறது.
இதன் காரணமாக, அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு முடிவுக்கு சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க பார்லி உறுப்பினர்கள் வெளிப்படையாக டிரம்ப்பின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய தீர்மானத்தை அந்நாட்டு பார்லி உறுப்பினர்கள் டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.
வட கரோலினா, வட டெக்ஸான் உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்புடையவை. டிரம்ப்பின் வரி விதிப்பால், இந்த மாகாணங்களில் வசிக்கும் மக்கள் விலைவாசி உயர்வு, வர்த்தக பாதிப்பு போன்றவையால் அதிகம் பாதிக்கின்றனர்.
இந்தியா - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது; அமெரிக்க நலன்களையோ பாதுகாப்பையோ முன்னேற்றுவதற்குப் பதிலாக, இந்த வரிகள் எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. விநியோக சங்கிலிகளைச் சீர்குலைக்கின்றன. அமெரிக்க தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
மக்களுக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்தப் பிரச்னையில் தீர்வு காணப்பட்டால், அமெரிக்கா-இந்தியா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும், இவ்வாறு கூறினார்.
வரிவிதிப்பது நாட்டுக்கு கூடுதல் வருமானம் ஏற்படுத்தும் என்பது சரியான பொருளாதார விதி இல்லை .இறக்குமதிவரி என்பது ஏற்றுமதி செய்யும் நாடுகள் கொடுப்பதும் அல்ல .பொருள்களை உபயோகப்படுத்தும் மக்கள் கொடுப்பதே .அதனால் அமெரிக்கா விதிக்கும் வரிகள் எல்லாம் அந்நாட்டு மக்களின் கூடுதல் சுமையே . பாதகம் என்னவென்றால் மக்கள் பொருள் நுகர்வு குறையும் .ஏற்றுமதி இறக்குமதி குறையும் .அதனால் விற்பனை வரிவசூல் குறைந்து ,விற்பனைவரிக்குறைவை இறக்குமதி வரி ஈடுசெய்யும் .அதனால் வண்டி ஓடும் ஆனால் சக்கரம் சுழலாது .
வரிய குறைத்து எங்களுக்கு பிச்சை போடவேண்டாம்
50% வரி விதிப்பால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, அமெரிக்காவில் செய்ய வேண்டிய வணிகத்தை வேறு நாட்டில் செய்து கொள்கிறோம் , உள்நாட்டிலேயே வணிகத்தை அதிகரித்து கொள்கிறோம், முதலில் கொஞ்சம் கஷ்டமும் நஷ்டமும் இருக்கும் போக போக சரியாகிவிடும் வாழ்க பாரதம்
அமெரிக்காவில் காங்கிரஸ், செனட் தான் இருக்கு. பார்லி, கோதுமை வேணா இருக்கு.
இந்தப் பிரச்னையில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்வு காணப்பட்டால், அமெரிக்கா-இந்தியா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படும். டிரம்ப் தன்னுடைய அராஜகப்போக்கை மாற்றி இந்தியாவுடன் சமாதானமாக இருக்க முயலவேண்டும். பேச்சுக்கு பேச்சு மோடி என் நண்பன் என்று கூறிக்கொண்டால் போதாது.
நீங்க ஒரு மண்ணாங்கட்டி வரியயும் குறைத்து எங்களுக்கு பிச்சை போடவேண்டாம். நீ என்ன வேண்ணாலும் பண்ணிக்க. நாங்க என்ன வேண்ணாலும் பண்ணிக்கிறோம். நீ பாகிஸ்தான் துருக்கி இவனுங்க வச்சிக்கிடடு நல்லா வாழ்ந்துக்கோ.
சபாஷ்.. இதைத்தான் இந்தியர்களான நாங்கள் எதிர்பார்த்தோம்.... டிரம்பரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் அணைத்து நாடுகளுடனும் நாம் நம் நல்லுறவை அமைதியான முறையில் புரிதலுடன் வளர்க்க வேண்டும்.....மேலும்
-
நெட் மீட்டர் வசதியுடன் சோலார் பேனல் மானியம் வழங்க விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு
-
விஜய் கட்சியில் காங்கிரசுக்கு 50 'சீட்?' பா.ஜ., வளர்ச்சியை தடுக்க ராகுல் வியூகம்
-
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது 'அபெடா'
-
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
-
காரைக்குடியில் 5 தலைமுறைகளை கண்ட 100 ஆண்டை தொட்ட பாரம்பரிய வீடு: குடும்பத்தினர் 300 பேர் கொண்டாட்டம்
-
'பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிலோவுக்கு ரூ.40 வேண்டும்'