ஓசூர் பி.எம்.சி., கல்லுாரியில் எரிசக்தி தினம்
ஓசூர்: ஓசூர், பி.எம்.சி., டெக் கல்லுாரியில், இந்திய பொறியாளர்கள் சங்க, ஓசூர் உள்ளூர் மையம், பி.எம்.சி., டெக் கல்வி நிறுவ-னங்கள் சார்பில், எரிசக்தி சேமிப்பு தினம் கொண்டாடப்பட்டது. பி.எம்.சி., டெக் கல்வி குழும தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர் முன்னிலை வகித்தார். இந்திய பொறியாளர்கள் சங்க, ஓசூர் உள்ளூர் மைய தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். சிமுலேஷன் சொலுஷன் இயக்குனர் ராஜேந்திரன், பசுமை மிக்க, எரிசக்தி திறன் வாய்ந்த எதிர்காலத்தை உருவாக்க, புதுமை மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் அவசியம் என்பதை விளக்கினார். பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் இயக்குனர் சுதாகரன், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர், எரிசக்தி சேமிப்பு பற்றி விளக்கினர்.
தொடர்ந்து, இன்ஜினியரிங், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை-களில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்-கப்பட்டன. பாலனி என்பவருக்கு எரிசக்தி சேமிப்பு சிறப்பு விருது, முருகன் கைலாசத்திற்கு சிறந்த மேன்மை மிக்க பொறி-யாளர் விருது, பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த முதல்வர் விருது, ரேணுகாதேவிக்கு சிறந்த ஆசிரியர் விருது, கார்த்திகேயனுக்கு சிறந்த பேராசிரியர் விருது, பாலமுருகனுக்கு சிறந்த ஆராய்ச்சி-யாளர் விருது வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, சிவராஜ், செல்-வராஜ் செய்திருந்தனர்.
மேலும்
-
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
-
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
-
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
பவுலிங் செய்ய விருப்பம்: ஷைபாலி வர்மா 'ரெடி'
-
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
-
உலக விளையாட்டு செய்திகள்