தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறி உள்ளார்.
கோடங்கல் தொகுதியில் கோஸ்கி ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
2029ம் ஆண்டு தேர்தலில் 119 சட்டமன்றத் தொகுதிகளில் 87 இடங்களை காங்கிரஸ் வெல்லும். சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால், காங்கிரஸ் 150ல் 100 இடங்களைப் பிடிக்கும்.
இது கே.சி.ஆருக்கு நான் விடுக்கும் சவால். நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆர் ஆட்சிக்கு வருவது ஒரு கனவாகவே இருக்கும். பி.ஆர்.எஸ் மற்றும் கே.சி.ஆரின் வரலாறு முடிந்துவிட்டது. கோடங்கல் பகுதியில் பி.ஆர்.எஸ்.ஸை அடக்கம் செய்வதாக நான் உறுதிமொழி எடுக்கிறேன்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.
மேலும்
-
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தின விழா
-
தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வேண்டும் மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை
-
கூட்டுறவு நகர வங்கியில் மேலாண் இயக்குனர் ஆய்வு
-
7 வீடுகளில் திருட்டு கிராமத்தினர் கலக்கம்
-
ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணியர்; போக்குவரத்து நெரிசலால் அவதி போக்குவரத்து நெரிசலால் அவதி
-
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்