ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்

28

கோவை: சென்னையில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த இண்டர்சிட்டி ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கோவை ஆர்எஸ்புரம் போலீஸ் ஷேக் அப்துல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


கோவை ஆர்எஸ்புரம் போலீஸ் ஸ்டேஷனில் ஷேக் அப்துல்லா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு ரயிலில் பயணித்துள்ளார். அவர் காட்பாடி அருகே ரயில் வந்த போது, அதே ரயிலில் பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஷேக் அப்துல்லாவிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.



மாணவி எடுத்த வீடியோவின் அடிப்படையில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் ஷேக் அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஷேக் அப்துல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


ஓடும் ரயிலில் பெண்ணிற்கு போலீஸ் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement