100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
சென்னை:100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்ததை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய போராட்டங்களை முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது அறிக்கை:
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.
இது தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய பாஜ ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
-
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
-
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
பவுலிங் செய்ய விருப்பம்: ஷைபாலி வர்மா 'ரெடி'
-
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
-
உலக விளையாட்டு செய்திகள்
Advertisement
Advertisement