முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்; தமிழக அரசு அறிவிப்பு
சென்னை; தமிழகத்தில் முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளபடி, தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் இன்று 6வது நாளை எட்டியது.
போராட்டம் தீவிரம் அடைய, சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந் நிலையில் முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். மீதம் உள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அரசின் முடிவினை ஏற்று செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விரைவில் வருகிறது. முதல் கட்டமாக "நாமம்".மேலும்
-
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
-
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
-
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
பவுலிங் செய்ய விருப்பம்: ஷைபாலி வர்மா 'ரெடி'
-
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
-
உலக விளையாட்டு செய்திகள்