ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டம்
நமது நிருபர்
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து, இந்தியாவின் மேற்குவங்கத்தில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. கடந்த 18ம் தேதி இவர் அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவரம் வெளியானவுடன் வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது. மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.
நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது. இந்த சம்பவத்திற்கு, அந்நாட்டு இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை கண்டித்து, இந்தியாவின் மேற்குவங்கத்தில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன. ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், இதற்குகாரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த போராட்டம் நடந்தது.
குறிப்பாக கோல்கட்டாவிலும், தெற்கு மேற்குவங்க மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது. பேரணியை போலீசார் தடுத்ததால், போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து தடுப்புகளை உடைக்க முயன்றனர், இதனால் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் கூறியதாவது: போராட்டம் என்ற பெயரில் யாருடைய இயல்பு வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பிரச்னையை உருவாக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க சட்டத்தின்படி செயல்படுவோம் என போலீசார் தெரிவித்தனர்.
மேற்க்கு வங்கத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு பாக்கிஸ்தானியோ , பங்களாதேஷியோ இருக்கவே கூடாது அடித்து விரட்ட வேண்டும்.மேலும்
-
அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்
-
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
-
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 87 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்; முதல்வர் ரேவந்த் ரெட்டி
-
பவுலிங் செய்ய விருப்பம்: ஷைபாலி வர்மா 'ரெடி'
-
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
-
உலக விளையாட்டு செய்திகள்