'மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி': அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
புதுடில்லி: பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு நன்றி என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளியில் உள்ள ஐபோன் தயாரிப்பு ஆலையில், 9 மாதத்துக்குள் 30,000 பேரை, வேலைக்கு அமர்த்தி, தைவானைச் சேர்ந்த 'பாக்ஸ்கான்' நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பான செய்தியை தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்.பி.,ராகுல், கவுரவமான வேலைகள், அனைவருக்குமான வாய்ப்புகள் என கர்நாடக அரசுக்கு பாராட்டு தெரிவித்துஇருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தன் சமூகவலைதள பக்கத்தில், 'பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
'பிரதமரின் தொலைநோக்கு பார்வையை முழுமையாக செயல்படுத்தி வருவதால், நாம் ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாறி வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.
ஒரு வந்தே பாரத் ரயிலை கூட துவக்கி வைக்க முடியவில்லைமேலும்
-
தென் மண்டல ஆதியோகி ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்
-
ஊட்டியில் முதல்முறையாக மலைக் காய்கறிகள் சாகுபடி பயிற்சி
-
ஓசூரில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது; விவசாயிகள் பங்கேற்க அழைப்பு!
-
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
-
ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு