ஸ்டாலின் மற்றும் பழனிசாமியுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை, டிச. 26--
முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரை, தே.மு.தி.க., நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர், நேற்று சந்தித்து பேசினர்.
தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவு தினம், வரும் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை கோயம்பேடில் உள்ள, அவரது நினைவிடத்தில், தே.மு.தி.க., சார்பில், குரு பூஜை நிகழ்வுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க வருமாறு, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரை, அவர்களின் இல்லத்தில், நேற்று தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்து, அழைப்பு விடுத்தனர்.
இது குறித்து பேட்டி அளித்த சுதீஷ், “விஜயகாந்த் நினைவு தின நிகழ்வில் பங்கேற்குமாறு அழைக்கவே, முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி, ஆகியோரை சந்தித்தோம். அரசியல் எதுவும் பேசவில்லை,'' என்றார்.
வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுடனும் தே.மு.தி.க., பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இரு கட்சி தலைவர்களையும், தே.மு.தி.க., நிர்வாகிகள் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
-
கலிபோர்னியாவை புரட்டிப்போடும் கிறிஸ்துமஸ் புயல்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
-
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு
-
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
-
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை