கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்
கரூர்: கரூரில் நடந்த, பிள்ளையார் நோன்பு திருவிழாவில், ஒரு கிலோ உப்பு, 26,000 ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கரூர் நகரத்தார் சங்கம் சார்பில், 39வது பிள்ளையார் நோன்பு விழா, கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, நோன்பு நிறைவு நாள் நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்டவர்கள் நோன்பு களைந்தனர். தொடர்ந்து மங்கல பொருட்கள் ஏலம் நடந்தது.
அதில், ஒரு கிலோ உப்பு, 26,000 ரூபாய், ஹேண்ட் பேக், 10,500 ரூபாய், பூஜை தேங்காய், மணமாலை, வாழைப்பழம் உட்பட, 20க்கும் மேற்பட்ட மங்கல பொருட்கள், ஒரு லட்சத்து, 70,000 ரூபாய்க்கு ஏலம் போனது. நோன்பு திருவிழாவில் ஏலம் எடுத்தால், வேண்டுதல்கள் அடுத்த பிள்ளையார் நோன்புக்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால், மங்கல பொருட்கள் ஏலம் விறுவிறுப்பாக நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
13 சதவீதம் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; தமிழக அரசு மீது அன்புமணி காட்டம்
-
பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…! அமைச்சர் ரகுபதி பதிலடி
-
அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
-
கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் கண்டனம்
-
புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்; குற்றப்பத்திரிக்கையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்ப்பு
-
முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி
Advertisement
Advertisement