அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
வாஷிங்டன்: தீ வைப்பு, பயங்கரவாத மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், இந்திய வம்சாவளி மாணவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளி மாணவர் மனோஜ் சாய் லெல்லா, 22. டெக்சாஸ் பல்கலையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான படிப்பில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
கடந்த 22ம் தேதி, மனோஜ் தன் குடும்ப உறுப்பினர்களை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன், தன் வீட்டை தீ வைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனோஜ் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மனோஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஜாமின் வழங்க, 86 லட்சம் ரூபாய் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நோய்வாய்ப்பட்ட பெண்ணை கட்டிலில் துாக்கிச் சென்று சிகிச்சை
-
வாக்களர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு
-
ஜாக்டோ ஜியோ ஆயத்த மாநாடு
-
மாவட்ட ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்
-
உதவி பேராசிரியர் தேர்வில் 128 பேர் 'ஆப்சென்ட்'
-
இரு மடங்காக அதிகரித்த தக்காளி விலை