அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் புரட்சி வெடிக்கும்; காடேஸ்வரா சுப்ரமணியம்
மதுரை: 'திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது புரட்சியாக வெடிக்கும்' என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்திரன் வீட்டிற்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்நேற்று மாலை சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன் தன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் தி.மு.க., மீது பற்றுள்ளவர்கள். தி.மு.க., அரசு அவர்களது குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும். இதுவரை தி.மு.க., வைச் சார்ந்த யாரும் நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை.
கந்துாரி விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல. இரண்டுமதத்தினருக்கும், மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லையென்றால் இருவருக்கும் அனுமதி மறுக்க வேண்டும்.அதனைவிட்டு விட்டு, ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்குவது சரியானதல்ல.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர்.
அதற்காக அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், புரட்சியாக வெடிக்கும். எனவே, அரசு எச்சரிக்கையாக இருந்து அறநிலையத்துறையை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பட்டிப்பட்ட காலந்தாழ்ந்த உணர்ச்சிப்பெருக்குக்கு வாழ்த்துக்கள். இதோ தொடரவேண்டும். நம்மை யார் கேட்பது என்கிற மமதையும் ஆணவமும் அராஜகமும் ஒழிக்கப்படத்தான் வேண்டும். தயாராகுங்கள், காலம் கனிகிறது
தமிழ்நாட்டின் ""பாபரி மஸ்ஜித்"" ஆகிவிடும் திருப்பரங்குன்றத்தில் தர்கா
தீபத்தூண் போராளி உயிர் தியாகி பூரண சந்திரனின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் தமிழக இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக தீபத்தூரில் தீபம் ஏற்றிட போராட வேண்டும்.
இவ்ளோ நடந்தும் இன்னும் அரசை நம்புறீங்க பாருங்க அதான் திமுக பலம்
இவங்கள என்ன பண்ணாலும் சும்மா அறிக்கை மட்டும் விடுவாங்க
அரசாங்கம் சட்டத்தை மதித்தால் நாமும் மதிக்கலாம்
அத்து மீறவேண்டும்
அண்ணா போராட்டத்திற்கு கஸ்தூரி விடுதலை ஆனவுடன் அவர் வீட்டு முன்பு, கஸ்துரி பேட்டி கொடுக்கும் போது, தலைவி வாழ்க என கோஷம் போட்டவர்களை தயவு செய்து போராட்டத்தில் முன்னாள் நிறுத்தவும்
ஊசி பட்டாசு வேடிக்கையாலே வெச்சாலே வெடி டமார் டமார்.
ஓசி சோறு பிரியன்....அலுமினிய தட்டு தான் வேணும்மேலும்
-
13 சதவீதம் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; தமிழக அரசு மீது அன்புமணி காட்டம்
-
பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…! அமைச்சர் ரகுபதி பதிலடி
-
அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
-
கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் கண்டனம்
-
புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்; குற்றப்பத்திரிக்கையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்ப்பு
-
முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி