பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பட்டா மாறுதலுக்காக 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஒ ஜான் அருளப்பன் என்பவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேராம்பூர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த். இவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து இருந்தார். பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, விராலிமலை வி.ஏ.ஓ., ஜான் அருளப்பன் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத அருளானந்த், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த ஜான் அருளப்பனிடம் 6 ஆயிரம் ரூபாயை அருளானந்த் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பணத்தை வாங்கும் போது ஜான் அருளப்பனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து (2)
Sekar Times - ,இந்தியா
27 டிச,2025 - 14:57 Report Abuse
லஞ்சம் ஊழல் ஒழிய மரணதண்டனை கொடுக்க வேண்டும் 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
27 டிச,2025 - 14:55 Report Abuse
அது என்ன VAO மட்டும் ரெகுலரா மாட்டுகிறார்கள். நாடறிந்த RTO மற்றும் பத்திரப்பதிவு ஆபீஸ் பேர்வழிகள் ஒரு போதும் மாட்டுவதில்லையே. இவர்களை பிடிக்கக்கூடாது என GO ஏதும் உள்ளதோ? 0
0
Reply
மேலும்
-
13 சதவீதம் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; தமிழக அரசு மீது அன்புமணி காட்டம்
-
பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…! அமைச்சர் ரகுபதி பதிலடி
-
அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
-
கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் கண்டனம்
-
புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்; குற்றப்பத்திரிக்கையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்ப்பு
-
முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி
Advertisement
Advertisement