என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
சென்னை: என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடையில் விவாதிக்க தயாரா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.
''நெஞ்சை நிமிர்த்தி காலரை உயர்த்தி தமிழகம் முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதல்வரே. நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
நீங்கள் நின்று பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று. அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கி விட்டு பேசுகிறீர்களே. உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது?
தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.
முதல்வர் ஸ்டாலின் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல். இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!) அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே...
பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது.என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? ஓபன் சேலஞ்சுக்கு பிறகு முதல் கே ள்வி நீட் ரத்து என்னாச்சு? இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (41)
Barakat Ali - Medan,இந்தியா
27 டிச,2025 - 18:45 Report Abuse
பதில் என்ன ???? பேச்சு பேச்சோட இருக்கணும் .... சொல்லிட்டேன் ..... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
27 டிச,2025 - 18:40 Report Abuse
இபிஎஸ் சவாலுக்கு பதில் ???? பல்டிதான் ..... 0
0
Reply
V K - Chennai,இந்தியா
27 டிச,2025 - 18:35 Report Abuse
திமுக அதிமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லாத ஆணிகள் ரெண்டும் ஊழல் பெருச்சாளி 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
27 டிச,2025 - 18:23 Report Abuse
‘புறமுதுகு காட்டி ஓடும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ச் தேவையா?’ - திமுக பதிலடி:::‘என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?’ என கேட்டிருக்கிறார். இதற்கு எதற்கு மேடை போட வேண்டும்?சட்டமன்றத்தில்தான் நேருக்கு நேர் பேசலாமே அங்கே முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் வெளிநடப்பு என புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு ஓபன் சேலஞ்ச் என பீலா தேவையா? 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
27 டிச,2025 - 18:21 Report Abuse
என்ன பயம் 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
27 டிச,2025 - 17:53 Report Abuse
Will you give questions in advance???? Tamil Nadu needs governors rule. 0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
27 டிச,2025 - 17:51 Report Abuse
என்னங்க நீங்க விவாதத்திற்கு எல்லாம் கூப்பிடுகிறீங்க.... திடீர் திடீர் என்று கேள்விகள் எல்லாம் மாற்றி கேட்டால் பதிலுக்கு யாரை தேடுவது. 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
27 டிச,2025 - 17:42 Report Abuse
தேர்தல் நெருங்குகிறது, அவலங்கள் ஆயிரமாயிரம். அனைத்தையும் பட்டியலிட்டு மக்களிடம் வழங்குங்கள், தீவிர பிரசாரம் செய்து இப்பொழுதிருக்கும் ஆட்சியை நிரூபணத்துடன் மக்களுக்கு புரியுமாறு அம்பலப்படுத்தவேண்டும். 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
27 டிச,2025 - 17:14 Report Abuse
முதலமைச்சாராக இருந்த இருக்கிற இரண்டு பேரும் , திரு விஜய் அண்ணாமலை, சீமான், குருமா வளவன், அன்புமணி,ஆகியோருடன் ஓரே மேடையில் தமிழக த்தின் தற்போதய நிலமையையும், வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, ஒவ்வொரு துறைகளின் அயோக்கிய தனத்தையும், விவாதிக்க தயாரா, 0
0
Reply
Sun - ,
27 டிச,2025 - 17:12 Report Abuse
கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா? ம்ம்ம் எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்! 0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
-
13 சதவீதம் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; தமிழக அரசு மீது அன்புமணி காட்டம்
-
பழனிசாமிக்கு பேச்சை பாருங்க…! அமைச்சர் ரகுபதி பதிலடி
-
அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
-
கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் கண்டனம்
-
புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்; குற்றப்பத்திரிக்கையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்ப்பு
-
முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி
Advertisement
Advertisement