சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
புதுடில்லி:மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் சேவை வழங்குநரிடம் புகார் தெரிவித்த போதிலும் அதனை கண்டுகொள்ளாத நிறுவனங்களின் வரிசையில் வோடா போன் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல்களை டிராய் பிறப்பித்து உள்ளது. இருப்பினும் அவைகள் சரியான
முறையில் செயல்படுகிறதா என்பதைகண்டறிய லோக்கல் சர்க்கிள் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதற்காக நாடு முழுவதும் 349 மாவட்டங்களில் இருந்து 48 ஆயிரம் பேர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தளத்தில் தகவல் தெரிவிப்பவர்கள் தங்களது ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களது தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தகவல் கூறியவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள்.
தகவலில் தெரிவித்து இருப்பதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் 65 சதவீதம் பேர் நெட்வொர்க் இணைப்புப் பிரச்சனை குறித்தும், 54 சதவீதம் பேர் தேவையற்ற அழைப்புகள் குறித்தும் 23 சதவீதம் பேர் கட்டணம் தொடர்பான புகார்களை கூறி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் 47 சதவீதம் பேர், தங்கள் புகார்கள் பெரும்பாலும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என கூறி உள்ளனர். இத்தகைய புகாரில் முதலிடத்தில் வோடாபோன் ஐடியா முதலிடத்திலும் அதனை தொடர்ந்து ஏர்டெல், ஜியோ போன்ற பெரியநிறவனங்களும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை," என்று லோக்கல்சர்க்கிள்ஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது
மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் சேவை வழங்குநரிடம் புகார் தெரிவித்த போதிலும் அதனை கண்டுகொள்ளாத நிறுவனங்களின் வரிசையில் வோடா போன் நிறுவனம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில்தான் உள்ளது.
நான் நீண்ட காலமாக பயன்படுத்துகிறேன் சில மாதங்கள் முன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் அப்போது வடோபோன் நன்றாக வேலை செய்தது பிஎஸ்என்எல் விட.மேலும்
-
திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்; நயினார் நாகேந்திரன்
-
ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக பார்த்த காங்.,: அமித்ஷா சாடல்
-
எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில்...; காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தல்
-
பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை; செல்வப்பெருந்தகை
-
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாஜ முன்னாள் எம்எல்ஏ செங்காரின் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம்கோர்ட்
-
ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை வழக்கு; பழைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்