2026-27ம் ஆண்டு பட்ஜெட்; பிரதமருடன் நிர்மலா சீதாராமன், பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை
புதுடில்லி: 2026ம் ஆண்டு பட்ஜெட் குறித்து, டில்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.
மத்திய பட்ஜெட், கடந்த 2017ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2026ல், பிப்ரவரி 1ல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் போன்ற மிக முக்கிய நிகழ்வுகளுக்காக பார்லி., கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 2020ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை பார்லிமென்ட் கூடியது.
2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ல் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் இன்று (டிசம்பர் 30) பட்ஜெட் குறித்து, டில்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.
நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (7)
அப்பாவி - ,
30 டிச,2025 - 20:47 Report Abuse
வழக்கம் போல வலிக்காம அடிங்க... 0
0
Reply
Rameshmoorthy - bangalore,இந்தியா
30 டிச,2025 - 19:31 Report Abuse
Rs 200 will always be negative 0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
30 டிச,2025 - 17:50 Report Abuse
வந்துட்டாங்கய்யா பொருளாதார புலி அடுத்து எதையெல்லாம் அதானிக்கு அள்ளி கொடுக்கலாம் அதற்க்கு பிரதிபலனாக எத்தனை கோடி கொள்ளையடிக்கலாம் என்று ஆலோசனை செய்ய 0
0
vivek - ,
30 டிச,2025 - 18:21Report Abuse
எப்போதும் தற்குறி போலதான் கருத்து போடுவாயா 0
0
murugan - abu dhabi,இந்தியா
30 டிச,2025 - 19:24Report Abuse
கொள்ளை அடிப்பது திருட்டு திராவிட கும்பல். அக்கும்பலிடம் பொய் சொல் உனது வ்யக்க்யானத்தை. கொஞ்சமாவது சுயபுத்தி வேண்டும். 0
0
C.SRIRAM - CHENNAI,இந்தியா
30 டிச,2025 - 21:59Report Abuse
இன்றைக்கு இரு நூறு வந்தாச்சா ? 0
0
Reply
venkadesh - ,
30 டிச,2025 - 15:27 Report Abuse
மக்கள் பயன் அடையும் திட்டங்கள் கிடைத்தால் நல்லது தான் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement