ஓய்வூதிய திட்டங்களை ஆராய்ந்த குழு; முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்த குழுவினர், முதல்வர் ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், 2003ம் ஆண்டு க்கு பின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ச ங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் போராட்டம் இது தொடர்பாக, அமைச்சர்கள் குழு நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், 95 சதவீத சங்கங்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தின.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் எது சிறந்தது என்பதை அறிய, தமிழக அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து ஆராய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நிதித்துறை துணை செயலர் பிரக்திக் தயாள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், அக்டோபரில் இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட, பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் முடிவெடுத்து உள்ளன.
முக்கிய அறிவிப்பு இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர், முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர்.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் அடுத்த 10 நாட்களுக்குள் முடிவெடுத்து, முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என, நிதித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ABOLISH All Pensions.மேலும்
-
குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
-
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு