உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

10


சென்னை: '' உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பணம் கேட்டு மிரட்டல் மற்றும் நில அபகரிப்பு புகாரின் கீழ் வாராகி என்ற யுடியூபரை போலீசார் கைது செய்தனர்.பிறகு அவர், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, வாராகியின் மனைவி நீலிமா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் தனபால் அமர்வு, குண்டர் சட்டத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது. உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியதுடன் வாராகிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கியதுடன், அவரது மனைவி தொடர்ந்த மனு குறித்து 12 வாரங்களுக்குள் பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement