தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பாட்டாளி முன்னேற்ற தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல துணை தலைவர்கள் மாயவேல், சண்முகம், சுபாஷ், ராமலிங்கம், மண்டல துணை செயலாளர்கள் சரவணன், சசிகுமார், அருள், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், மாநில பேரவை தலைவர் ஜெய்சங்கர், மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் குப்புராஜன் ஆகியோர் தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர்.
இதில், 15 வது ஊதிய ஒப்பந்தப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்கநடவேண்டும்; கருணை மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்; என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மண்டல பொதுச்செயலாளர் ராஜமூர்த்தி, பேரவை துணைச் செயலாளர் முருகன், பேரவை துணை தலைவர்கள் ஆணைமுத்து, கருணாநிதி, மண்டல அமைப்பு செயலாளர் அருள்நிதி, ஊடகப் பிரிவு செயலாளர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மண்டல பொருளாளர் குமார், நன்றி கூறினார்.
மேலும்
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை