மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி

23

கோல்கட்டா: '' மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்,'' என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.





மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது.


கோல்கட்டாவில் நிருபர்களைச் சந்தித்த அமித்ஷா, பாஜவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மம்தா தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது எனக்குற்றம்சாட்டினார்.




இந்நிலையில் பங்குராவின் பிர்ஷிங்பூரில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். இப்பணி காரணமாக மேற்கு வங்கத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். ஏஐ உதவியுடன் எஸ்ஐஆர் நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய மோசடி. தகுதி வாய்ந்த வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்.




தேர்தலுக்கு முன்பு பொற்கால வங்காளத்தை உருவாக்குவோம் என்கின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களில் வங்கத்தை சேர்ந்தவர்களை தாக்குகின்றனர். மேற்கு வங்க மக்கள் பாஜ ஆட்சிக்கு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement