அறிவியல் ஆயிரம்: விண்வெளியில் சுண்டெலி

அமெரிக்காவின் ஐ.எஸ்.எஸ்., போல பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் 'டியான்காங்' விண்வெளி மையத்தை சீனா அமைத்துள்ளது. ஆய்வுக்காக இம்மையத்துக்கு 2025 அக். 31ல் நான்கு சுண்டெலிகள் அனுப்பப்பட்டன.

இரண்டு வாரம் விண்வெளியில் தங்கியிருந்த பின் நவ., 14ல் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது. தற்போது பூமியில் குட்டிகளையும் ஈன்றது. விண்வெளி மையத்தின் பூஜ்ஜிய புவியீர்ப்பு விசை, பாலுாட்டிகளின் இனப்பெருக்கம், துவக்க கால வளர்ச்சியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்யும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement