இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாம் நாளாக நேற்று, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐந்தாம் நாளாக, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, இடைநிலை ஆசிரியர்களை, ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக தயாரித்து, அதில், 'கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே' என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளனர். அதை கையில் ஏந்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சிலர், வெயிலின் தாக்கத்தால், திடீரென மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நீதி தேவதை போல ஆசிரியர்கள் சிலர் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, தராசை கையில் பிடித்து, நுாதன போராட்டம் நடத்தினர். ஆசிரியர்களின் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.
@block_B@
போராட்டத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின், 9 வயது மகள் சாய்ருத்ரா பேசும்போது, ''நான் பிறந்ததில் இருந்து, என் அம்மாவுடன், போராட்டம் நடத்தி வரு கிறேன். ஸ்டாலின் தாத்தா களத்துக்கு வந்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்,'' என்றார்.block_B
நீங்கள் வேலைக்கு சேரும்போது உங்கள் ஊதியம்,பணப்பலன்கள், ஊதிய உயர்வு போன்ற அணைத்து விசயங்கள் பற்றி தெரிந்து தானே சேர்ந்தீர்கள்? இப்போது ஊதியம் பற்றவில்லை என்று போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலா படிக்க வைக்கிறீர்கள்? பள்ளிக்கு செல்லாமல் போராடிக்கொண்டிருந்தால் ஏழை குழந்தைகள் படிப்பு என்னாவது?
அரசு சம்பளம் பெரும் ஊழியரின் மிக மோசமான செயல், அவர்களது குழந்தைகளை போராட்ட களத்திற்கு கொண்டுவந்து, அழவைத்து ஊடகங்களில் காண்பிக்க வைத்து, கேவலமான பரிதாபத்தை பொதுமக்களிடம் தேடுவது. இது கண்டிக்கத்தக்கது. மேலும், இவர்களது வாரிசுகளை, குறைந்த சம்பளம் தரும் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, அவர்கள் தரத்தை உறுதிசெய்துவிட்டு, இவர்கள் மட்டும் எவ்வளவு தான் சம்பளம் மற்றும் சலுகை தந்தாலும், போராடிக்கொண்டே இருப்பது. இவர்களின் தரம் தான் சந்தி சிரிக்கிறதே. தகுதி தேர்வில், தாய்மொழி பாடத்திலேயே அதிகமானோர் படுதோல்வி. தகுதி தேர்வு கூடாது, பணி சுமை கூடாது, பக்கத்து தெரு பள்ளிகளிலேயே வேலை வேண்டும். அரசின் கஜானா சாவியை இவர்கள் கையில் ஒப்படைத்து விடவேண்டும். முதலில் அரசு சம்பளம் பெரும் தேவையற்ற துறைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அரசு பள்ளிகளில் சம்பளத்தை தவிர, பள்ளி மற்றும் ஆசிரியரின் தரம், நிர்வாகம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவற்றை கண்காணிக்க, ஒரு சிறந்த தனியார் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இதை உடனே செய்யுங்கள். பிறகு தானாகவே கூட்டம் கூட்டமாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்னங்கால் பிடரியில் பட, வீட்டுக்கு ஓடிவிடுவர்.
தேர்தல் நேரத்தில் சிக்கல் வேண்டாமே என்று விட்டு வைத்து இருக்கிறார்கள். இல்லை என்றால் குண்டர் துறையை வைத்து தூக்கி தனிமை சிறையில் வைத்து சாத்து சாத்து என்று சாத்தியிருப்பார்கள். ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தாலுமே இனி தீம்க்காவுக்கு ஓட்டுப்போட யோசிக்க வேண்டும்.மேலும்
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பாதிக்கப்பட்டவருக்கு நிதி வழங்கி ஆறுதல்