153% லாபத்தை அள்ளி தந்த சில்வர் இ.டி.எப்.,

சில்வர் இ.டி.எப்., பண்டுகள், நடப்பாண்டில் 153 சதவீதத்திற்கு அதிகமாக லாபத்தை அள்ளி வழங்கியுள்ளது.சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 29.24 டாலரில் இருந்து 80 டாலருக்கும் மேல் உயர்ந்தது. இதன் பலன், வெள்ளி இ.டி.எப்.,களிலும் எதிரொலித்தது. நடப்பாண்டில், தங்கத்தின் மீதான முதலீடு, கிட்டதட்ட 80 சதவீத லாபத்தை கொடுத்த நிலையில், வெள்ளி அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக லாபம் கொடுத்துள்ளது. வெள்ளியை நேரடியாக வாங்குவதைப்போல, டிஜிட்டல் முறையில் சில்வர் இ.டி.எப்., மற்றும் சில்வர் பண்டு ஆப் பண்டிலும் முதலீடு செய்யலாம்.

தங்கம், வெள்ளி ஒப்பீடு

கால அளவு தங்க இ.டி.எப்., வெள்ளி இ.டி.எப்.,

கடந்த 3 மாதங்கள் 22.34% 63.38%

கடந்த 6 மாதங்கள் 41% 110%

கடந்த 1 ஆண்டு 79.43% 152.95%

Advertisement