ரூ.2,028 கோடிக்கு சோலார் மாட்யூல் தயாரிக்க என்.டி.பி.சி., ஆ ர்டர்
புதுடில்லி: குஜராத்தைச் சேர்ந்த சூரிய சக்தி உபகரணத் தயாரிப்பு நிறுவனமான 'குரூ சோலார்', பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி.,யிடமிருந்து 2,028 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.
இதன்படி, உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு மின் திட்டங்களுக்கு, கிட்டத்தட்ட 1,464.50 மெகாவாட் திறன் கொண்ட உயர்தர சூரிய சக்தி தகடுகள் அதாவது மாட்யூல்களை, குரூ சோலார் வினியோகம் செய்யவுள்ளது.
இந்தத் தகடுகள் அனைத்தும், ராஜஸ்தானில் உள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையிலிருந்து, அடுத்த ஓர் ஆண்டுக்குள் தயாரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement